மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் சில இறப்பர் உற்பத்திகளுக்கு தடை

- Advertisement -

பயன்பாட்டிற்கு உதவாத இரண்டாம் தரப் பட்டியலுக்கு அமைவான பிளாஸ்டிக் உற்பத்திகளை உடனடியாக தடை செய்யுமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர கடிதம் ஒன்றின் ஊடாக  இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதற்கமைய மேற்சட்டையில் காணப்படும் பொத்தான்கள், ஒரு தடைவ மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான தேக்கரண்டி, முற்கரண்டி, கத்தி, உணவு பொதிகள், தயிர் பொதி, , உணவு உட்கொள்வதற்கு  பயன்படுத்தப்படும் தற்காலிக தட்டுகள், சுவரொட்டிகள், பதாதைகள், விளம்பரங்கள், அழைக்கப்படும் குளிர்பான உறிஞ்சிகள், ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்,

அத்துடன், 400 முதல் 500 மில்லிமீற்றர் கொள்ளளவு கொண்ட சொப்பிங் பைகள், PET    மற்றும் PVC ஆகியனவற்றால் உற்பத்தி செய்யப்படும் 400 மில்லிலீற்றருக்கும் 750 மில்லிலீற்றருக்கும் குறைவான போத்தல்கள், ஊதுபத்திகள் மற்றும் விளக்கு திரிகள் போன்றவற்றிற்கு பயன்டுத்தும் பொதிகள், பழங்கள் மற்றும் மரக்கறிகளை பொதி செய்ய பயன்படுத்தப்படும் இறப்பர் உற்பத்திகள், அவசர உணவு உற்பத்திக்காக பயன்படும் தட்டுகள் மற்றும் கரண்டிகள், ஆகியனவற்றையும் தடை செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இறப்பர் உற்பத்தி பொருட்களுக்கு மாற்றீடாக வேறு உற்பத்திகளை அறிமுகம் செய்யவதற்கான திட்டங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz