மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த கவனம் தேவை

- Advertisement -

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இருதரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்று வரும் இலங்கை முதலீட்டு மன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, கைத்தொழில், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்கு நிலையான மற்றும் கணிப்பிடக்கூடிய கொள்கைகள் மிகவும் முக்கியமானவை எனவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு அபிவிருத்தியை அடைவதற்கு முன்வருமாறு, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இறப்பர், ஆடைக் கைத்தொழில் மற்றும் தகவல் தொழிநுட்பம் உள்ளிட்ட 6 துறைகள் முதலீடுகளுக்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சிறப்பு பொருளாதார வலயங்களின் மூலம் வழங்கப்படும் சிறப்பு நிதிச் சலுகைகளைப் பயன்படுத்துமாறும், இந்திய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, 85 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 500 பங்கேற்பாளர்களுடன் கொழும்பில் இடம்பெற்றுவரும், இலங்கை முதலீட்டு மன்றத்தின் மெய்நிகர் சந்திப்பானது, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஆசியாவின் முதலாவது மெய்நிகர் மன்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz