மெய்ப்பொருள் காண்பது அறிவு

3 ஆவது தடுப்பூசிக்கு முன்பதிவு தேவை

- Advertisement -

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் மூன்றாவது தொகுதியும் வேண்டும் எனில், முன்கூட்டியே பதிவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுகாதாரத் தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியுடன், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

- Advertisement -

ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்

‘சுகாதார பரிந்துரைகளின்படி, உலகளாவிய சூழ்நிலையைப் பொறுத்து, தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வேண்டும் எனில் தற்போதே அறிவிக்க வேண்டும். உலகின் பல முன்னணி நாடுகள் ஏற்கனவே மூன்றாவது டோஸுக்கு தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளன. இது குறித்து இலங்கை சிறப்பு கவனம் செலுத்தி மூன்றாவது டோஸுக்கு தயார் செய்ய வேண்டியது அவசியமாகும்.உலகெங்கிலும் இருந்து தடுப்பூசிகளுக்கு பெரும் தேவை உள்ளது. இந்த போட்டி சூழலில் அதிகமான தடுப்பூசிகளைப் பெற பல நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒத்துழைப்புக்களைக் கோரி வருகின்றோம்.. இந்த நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகளை உரிய முறையில் வழங்குவது அவசியமாகும்.60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் , அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்களுக்கும் விரைவாக தடுப்புசிகளை வழங்க வேண்டும். மேலும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.’ என்றார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz