மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் பொது மக்களை பாதுகாக்க முடியுமா

- Advertisement -

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளின் ஊடாக, பொது மக்களைப் பாதுகாக்க முடியுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்புகின்றார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்

- Advertisement -

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்

‘நாட்டில் கடுமையாக பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவிக்கின்றது. கொரோனத் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் தரப்பினர் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ள நிலையில், நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள முறைமை சரியானதா என நாம் ஆட்சியாளர்களிடம் கேட்கின்றோம். இவ்வாறான பயணக் கட்டுப்பாடுகளின் ஊடாக இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியுமா? தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் பணிபுரிகின்ற நபர்களுக்கு, தமது அலுவல்களை மேற்கொள்வதற்கு தேவையின் அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பு நகருக்கு நாளாந்தம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றார்கள். தற்போது நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மாத்திரமே காண்பதற்கு இல்லை. ‘ என குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz