மெய்ப்பொருள் காண்பது அறிவு

அல்பா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 80 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்

- Advertisement -

நாட்டில் அல்பா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 80 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

- Advertisement -

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்..

‘பி 117 என்ற அல்பாஃ கொரோன தொற்றினால் கடந்த மாத்தில் மாத்திரம் 80 Nபுர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டில் பலபகுதிகளில் பிரித்தானியாவில் உருவான இந்த வைரஸ் பரவியுள்ளது. அதிக பாதுகாப்படன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய பிரசை ஒருவருக்கும் இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அல்பா பி117 என்ற கொரோனா வைரஸ் சமூக பரவலுக்கு வரவில்லை. இலங்கையில் அதிகமாக பரவிய பி1411 என்ற வைரஸ் திஸ்ஸமஹராம பகுதியில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அல்பா திரிபடையகூடிய கொரோனா வைரஸ்ஸிற்கான 460 பரிNசுhதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வைரஸ் குறைந்த பட்சம் நூற்றுக்கு 50 வீத வேகத்தில் பரவிவருகின்றது. இதுவரை 80 பேர் குறித்த தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிகிச்சை முறை அதிக பாதுகாப்பிற்குரியது. தற்போது செலுத்தப்படுகின்ற 3 வகையான தடுப்பூசிகள் அல்பா பி 117 தொற்றினை கட்டுப்படுத்துகின்றது. முக்கியமான நோக்கம் நோக்கம் குறித்த தொற்றினால் ஏற்படும் மரணங்களை தவிர்ப்பதே ஆகும்.’ என்றார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து சென்ற நபர் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றினாலேயே அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரம் மூடப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

‘உண்மையில் இந்த செய்தி பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கிடைக்கப்பெற்றவுடன் நாங்களும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தோம். அவுஸ்திரேலியாவில் தொற்றுறுதி செய்யப்பட்ட நபர் இலங்கையை சேர்ந்தவரில்லை. ட்ரான்சிட் பெசேஞ்சர் என அழைக்கப்படும் நபரே அவராவர். இலங்கைக்குள் எவ்வித சந்தர்ப்பத்திலும், அவர் பிரவேசிக்கவில்லை. அதனை தெளிவாக நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் எந்தவித அச்சத்தினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. இலங்கையிலிருந்து சென்ற நபர் இல்லை. இலங்கை வழியாக அவுஸ்திரேலியா சென்ற நபரே அவராவார். வேறொரு நாட்டிலிருந்து அவர் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார் என்பதனையும் உறுதி செய்கின்றோம்.’

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz