மெய்ப்பொருள் காண்பது அறிவு

Express pearl கப்பல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்கட்சியினரின் கருத்துக்கள்

- Advertisement -

Express pearl கப்பலின் ஊடாக, கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளமை தற்போது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் கலாநிதி அஜந்த பெரேரா தெரிவிக்கின்றார்.

தீ விபத்துக்குள்ளான Express pearl கப்பல் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

- Advertisement -

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்..

‘விபத்துக்குள்ளான கடற்பரப்பில் எண்ணெய்ப் படலமொன்று மிக வேகமாக பரவி வருவதாக, இன்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணெய்ப் படலம் கலப்பு பகுதிக்கு சென்றால், கடல் வளம் மாத்திரமல்லாது இரால் உருவாகின்ற மற்றும் மீன் முட்டையிட்டு மீன் குஞ்சுகள் உருவாகின்ற பகுதிகளிலும் முழுமையாக அழிவு ஏற்படும். இன்று கடல் வளம் அழிவடைந்துள்ள காரணத்தினாலேயே இன்று ஆமைகள் உள்ளிட்ட பல்வேறு ஏனைய மீன் வகைகள் கரையொதுங்குகின்றன. இவ்வாறு எண்ணெய்ப் படலம் பரவினால் நாட்டை சூழவுள்ள முழுமை கடற்பரப்பும் பாதிப்படையும்.’ என்றார்.

இதேவேளை, எதிர்க் கட்சியினரால் கப்பல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, பாரிய சந்தேகம் எழுவதாக, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிக்கின்றார்

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

அவர் மேலும் கருத்துரைக்கையில்..

‘கப்பல் குறித்து எனக்கு ஒரு விடயத்தைக் கூற முடியும். எதிர்க் கட்சியினர் இது குறித்து தொடர்ச்சியாக பேசி வருகின்றது. இது சரியா தவறா அல்லது உண்மையிலேயே நாட்டின் சுற்றுச் சூழல் தொடர்பில் இருக்கக் கூடிய அக்கறையின் அடிப்படையிலா எதிர்க் கட்சியி இது குறித்து கதைத்து வருகின்றது என்ற ஒரு பாரிய சந்தேகம் எழுகின்றது. வேறு நாடொன்றில் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்றால் அந்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இவ்வாறு கதைக்கும் அவர்கள் இந்த நாட்டுக்கு பல்வேறு நாசகார செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் செய்த அழிவுகளையும், இந்தக் கப்பலையும் ஒப்பீட்டுப் பார்க்க முடியாது. இந்த நிலையில் கப்பல் விவகாரத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்வோம். என்றார்.

இதேவேளை, தீ விபத்துக்குள்ளான Express pearl கப்பல் தொடர்பில் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் இன்று ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்

அவர் தொடர்ந்தும் பேசுகையில்..

‘குறித்த கப்பலுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூரின் smith salvechers நிறுவனம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது , கடந்த காலத்திலும் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக கோரப்பட்ட 20 பில்லியன் நட்ட ஈட்டை இந்த நிறுவனம் வழங்கவில்லை. அவ்வாறான ஒரு நிறுவனம் தான் தற்போதும் வந்திருக்கின்றது. அந்த நிறுவனம் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துடன் தற்போது சில டீல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சில பெளத்த தேரர்கள், சில தலைவர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் இணைந்து இந்த நிறுவனத்தின் கைக் கூலிகளாக மாறியுள்ளன. என தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz