மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த 18 நாடுகளைச் சேர்ந்த 800 பேர் கைது

- Advertisement -

சர்வதேச ரீதியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த 18 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச சட்ட அமுலாக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பொலிஸ் பிரிவுகள் மற்றும் அமெரிக்க புலனாய்வு பிரிவு ஆகியன ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர்கள் பயன்படுத்தும் செயலியொன்றை ஊடுருவி, அதில் பாதுகாக்கப்பட்டிருந்த செய்திகளை ஆராய்ந்ததன் மூலம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 148 மில்லியன் டொலர் பெறுமதியான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல டொன் அளவிலான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அவுஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz