மெய்ப்பொருள் காண்பது அறிவு

போலியான தகவல்களை பதிவேற்றினால் ஏற்படும் நிலைமை

- Advertisement -

சமூக வலைத்தளங்களில் கொரோனா நிலவரம் தொடர்பில் போலியான தகவல்களை பதிவேற்றம் செய்யும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

- Advertisement -

இந்த நிலையில், நாட்டிற்கு பாரிய அச்சறுத்தலை ஏற்படுத்திய விடயங்களை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றும் நபர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் புலனாய்வு குழுவை நியமித்து தன்னுடைய இயலாமையை அம்பலப்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் ஜனநாயகம் இன்மையை அரசாங்கத்தின் ஊடக ஒடுக்குமுறை எடுத்துக்காட்டுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை,  சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதானது, தகவல் அறியும் உரிமைக்குப் பங்கம் ஏற்படுத்துவதற்காக அல்ல என அமைச்சர் டிலான் பெரோ தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்று பரவல் காணப்படும் நிலையில் போலியான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களே வெளியாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கையில் சஜித் அணியினர் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமூக வலைத்தளங்கள் மூலமாக செய்திகள் வெளியிடப்படுவதை தாம் தடுக்கவில்லை. எனவும், போலித் தகவல்களையே தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என நாடாளுமன்ற

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz