மெய்ப்பொருள் காண்பது அறிவு

போலியான செய்திகளைப் பரப்புகின்றைமை, பிடியாணையின்றி கைது செய்யப்படக் கூடிய குற்றமாகும்

- Advertisement -

சமூக வலைத்தளங்களின் ஊடாக போலியான செய்திகளைப் பரப்புகின்றைமை, பிடியாணையின்றி கைது செய்யப்படக் கூடிய குற்றமாகும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்கள், சமூக வலைத்தளங்களின் ஊடாக போலியான செய்திகளை பரப்புகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இவ்வாறான போலியான செய்திகளின் மூலம், மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துதல், இனம் அல்லது மதங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுத்தப்படுவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், போலியான செய்திகளை உருவாக்குதல், வெளியிடுதல், பகிர்தல், மீள் பகிர்வு செய்தல் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுதல் ஆகியன குற்றமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, பொலிஸ் சட்டம், தண்டனைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதுடன், அவர்களுக்கிடையே பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் எனவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யசுரு குருவிட்ட எனும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய அவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் போலியான செய்திகளை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் குறற்ப்புலனாய்வு திணைக்ளத்தினரால் குறித்த இளைஞர் கைது செய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz