மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா உயிரிழப்புகளை அறிக்கையிடும் செயற்பாட்டில் விரைவான பொறிமுறை

- Advertisement -

கொரோனா உயிரிழப்புகளை அறிக்கையிடும் செயற்பாட்டில் விரைவான பொறிமுறையொன்றை முன்னெடுப்பது குறித்து கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி அவதானம் செலுத்தியுள்ளது.

கொரோனா தொற்றினால் வெவ்வேறு நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் அறிக்கையிடப்படுவதன் ஊடாக, மக்கள் அச்சமடையும் நிலைமை காணப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், சில நபர்கள் வெவ்வேறு காரணிகளால் உயிரிழந்த போதிலும், சடலம் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக, மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாத வகையில், விரைவான பொறிமுறையொன்றின் ஊடாக கொரோனா உயிரிழப்புகளை அறிக்கையிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்பான சட்டரீதியான தாக்கங்கள் மற்றும் அநாவசியமான தாமதங்களைத் தவிர்ப்பதைக் கருத்திற் கொண்டு இந்த செயன்முறையை விரைவுபடுத்துவது குறித்தும் கொரோனா செயலணியில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz