மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து நாடு திரும்பிய நபரின் மூலம் டெல்டா மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ்

- Advertisement -

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மாநிலத்தின் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்ததாகக் கருதப்படும் டெல்டா மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ், இலங்கையில் இருந்து நாடு திரும்பிய நபரின் மூலமாக பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மாநில பதில் ஆளுநர் ஜேம்ஸ் மெர்லினோவை (James Merlino) மேற்கோள் காட்டி அவுஸ்திரேலிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

- Advertisement -

இலங்கையில் இருந்து கடந்த மே 8 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய நிலையில், குறித்த நபர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அதே தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மெல்பர்ன் மாநிலத்தின் மேற்கு பிராந்தியத்தில் உருவாகிய கொரோனா கொத்தணியுடன், இலங்கையில் இருந்து நாடு திரும்பிய குறித்த நபரிடம் இருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு பொருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் மரபணு ரீதியான தொடர்பைக் கண்டறிந்துள்ள போதிலும், தொற்று நோயியல் ரீதியான தொடர்பு கண்டறியப்படவில்லை என, மெல்பர்ன் மாநில பதில் ஆளுநர் ஜேம்ஸ் மெர்லினோ (James Merlino) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்டா மாறுபாடு கொண்ட கொரோனா தொற்றுடன், மெல்பர்ன் மாநிலத்தின் மேற்கு பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும், இலங்கையில் இருந்து நாடு திரும்பிய குறித்த நபருக்கும் இடையில் காணப்படும் தொடர்பு குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த நபர் பயணித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 24 பேர் பயணித்துள்ளதுடன், ஏனைய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் இருந்து நாடு திரும்பிய குறித்த நபருக்கு, டெல்டா மாறுபாடு கொண்ட கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க செயற்பாடுகள் நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியுடன் நீக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz