மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 742 ஆக அதிகரிப்பு

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேலும் 46 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

கடந்த மே மாதம்   17 ஆம் திகதி முதல் இந்த மாதம் 5 ஆம் திகதி வரையில் குறித்த உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 23  பெண்கள்   மற்றும்  23 ஆண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றினால் குறித்த காலப்பகுதியில்  20 வயது முதல் 99 வயது வரையிலான நபர்கள்  உயிரிழந்துள்ளனர்.

அத்துடன்,  இவ்வாறு உயிரிழந்தவர்களில்  13 பேர் தமது வீடுகளில்  உயிரிழந்துள்ளதுடன், 31 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, ஹட்டன், மட்டக்களப்பு, நுவரெலியா, அவிசாவளை, வவுனியா, கம்பஹா, பசறை மற்றும் கம்பளை உள்ளிட்ட  உள்ளிட்ட  ஏனைய பகுதிகளில் இருந்தும் கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால்  எந்தவொரு உயிரிழப்பும் நேற்று பதிவுசெய்யப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன்,  இரண்டுபேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும், இந்த அனர்த்தத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த   2 இலட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz