மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

- Advertisement -

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய கொரோனா தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு தமது வீடுகளிலேயே 14 நாட்கள்  கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர்கள் இலங்கைக்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்பதாக தடுப்பூசிகளைப் பெறும் நடவடிக்கையினை நிறைவு செய்திருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

எனினும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருந்த போதிலும், இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு அல்லது அந்த நாடுகளின் ஊடாக கடந்த 14 நாட்களில் பயணம் செய்தவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக் கொள்ளாமல் நாட்டுக்கு வருகை தருபவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 14 நாட்கள்  கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிர்க்குமிழி முறைமையில் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் குறித்த புதிய நடைமுறை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz