மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமைப் பட்டியலில் மாற்றம்

- Advertisement -

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமைப் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு மேலும் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதற்கட்டமாகவும்  முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு இரண்டாவது முன்னுரிமை அடிப்படையிலும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கர்ப்பிணித் தாய்மாருக்கு மூன்றாவது முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன், அரச கள உத்தியோகத்தர்களுக்கு நான்காவது முன்னுரிமை  வழங்கப்படவுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் காணப்படும் ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலை ஊழியர்களுக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்ட பின்னர் 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஏனைய தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz