மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய சபையினூடாக நடவடிக்கை எடுத்திருக்கலாம்

- Advertisement -

எக்ஸ்பிரஸ் பேர்ல கப்பலில்  தீப்பரவல் ஏற்பட்டமை தொடர்பில் அரசாங்கம் ஏன்  தேசிய சபை  ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என   ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய  விசேட அறிவிப்பில்  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

‘எக்ஸ்பிரஸ் பேர்ல கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசித்திருந்தால் துறைமுகப்பகுதி முதல் சங்கரில்லா நட்சத்திர உணவகம் வரையிலான பகுதியில் ஒரு கட்டிடமேனும் எஞ்சப்போதில்லை. சரியான நேரத்தில் அரசாங்கம் தாமதிக்காது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. கடந்த மேல மாதம் 19 ஆம் திகதி குறித்த கப்பல் எமது கடல் எல்லைக்குள் பிரவேசித்தது. மே 20 ஆம் திகதி எமது குழுவினர் கப்பலுக்குள் சென்றனர். தீப்பரவலும் ஏற்பட்டுள்ளதை அறிந்திருந்தோம். 25 ஆம் திகதி மீபா நிறுவனம் மற்றும் ஐ எம் ஓ ஆகிய நிறுவனங்கள் குறித்த கப்பலின் மூலம் அபாயமுள்ளதாக அறிவித்தது. 20 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளுக்கிடையில் ஏன் நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அனர்த்த முகாமைத்துவ சட்டமே அதுவாகும் அந்த சட்டத்தின் கீழ் தேசிய சபையை ஒன்று கூட்டியிருக்கலாம். அதன் மூலம் அடுத்த தீர்மானங்களை மேற்கொண்டிருக்கலாம். அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தியிருக்கலாம். ‘ என்றார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz