மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாதுகாப்பற்ற பகுதியா – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நடவடிக்கை

- Advertisement -

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற குடியிருப்புக்களில் வசிப்பவர்களை குடியிருப்புக்களில் இருந்து அகற்றுவது தொடர்பில் விசேட சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இந்த விசேட சுற்றுநிரூபம்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்

- Advertisement -

இதற்கமைய வசிப்பதற்கு தகுதியற்ற பகுதியென அடையாளம் காணப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களை அகற்றுவதற்கும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவுகளை வழங்குவதற்கு  குறித்த சுற்று நிரூபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz