மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசேட ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று   முதல்  அறிமுகம்

- Advertisement -

அத்தியாவசிய சேவையாளர்களின் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று   முதல்  அறிமுகப்படுத்தப்படவுள்ளது

குறித்த நடைமுறை  நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப் பகுதியில் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

- Advertisement -

இதற்கமைய  சுகாதார துறையினருக்கு  ஊதா நிற  ஸ்டிக்கர்   வழங்கப்பட்டுள்ளதுடன்  முப்படையினர் மற்றும் பொலிஸ் துறையினருக்கு இளம்நீல நிறமும்,  அத்தியாவசிய சேவை முன்னெடுப்போருக்கு  சிவப்பு நிறமும், அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு   மஞ்சள் நிறமும்,  அரச பணியாளர்களுக்கு இளம்சிவப்பு நிறமும்  ஊடகதுறையினருக்கு  செம்மஞ்சள் நிறமும் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் தனியார் துறையினர் மற்றும் வங்கி உட்பட நிதிநிறுவனங்களுக்கு   ஊதா நிறமும்,    ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை துறை சார்ந்தவர்களுக்கு பழுப்பு நிறமும் ,   அத்தியாவசிய உணவுகளை விநியோகிப்பதற்கு  சாம்பல் நிறமும்,

மேலும் ஊடக துறையினருக்கும் செம்மஞ்சள் நிறமும்  வௌிநாடு செல்வதற்கு  பயணிப்போருக்கு வெள்ளை நிறமும்

இறுதிக்கிரியை, மருத்துவ பரிசோதனை போன்றவற்றுக்கு கறுப்பு நிறமும்  வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு முன்னதாக  அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர்களுக்கு மாறாக விசேட ஸ்டிக்கர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக 11 வகையான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz