மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு

- Advertisement -

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 10 மாவட்டங்களில் 67 ஆயிரத்து 564 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 70 ஆயிரத்து 912 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அத்துடன், 05 பேர் காணாமல் போயுள்ள நிலையில், தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 935 வீடுகள் பகுதியளவிலும், 15 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், 104 தற்காலிக முகாம்களில் 6 ஆயிரத்து 176 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 846 பேர் தங்வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக பாதிப்படைந்த 5 ஆயிரத்து 700 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 932 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 39 ஆயிரத்து 742 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 383 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 156 குடும்பங்களை சேர்ந்த 65 ஆயிரத்து 342 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

மேலும், புத்தளம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 748 குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 49 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

இதேவேளை, குருணாகலை மாவட்டத்தில் ஆயிரத்து 8 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 653 பேர்  பாதிக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz