மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்டிக்கர்  வழங்கும் திட்டத்தில்  மாற்றம்

- Advertisement -

அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக  பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட  ஸ்டிக்கர்  வழங்கும் திட்டத்தில்  மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு முன்னதாக  அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர்களுக்கு மாறாக விசேட ஸ்டிக்கர் வழங்கும் திட்டம் நாளை முதல்  அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, நாளை வழங்கப்படும் இந்த விசேட ஸ்டிக்கர்  பயணக்கட்டுப்பாடுகள்  தளர்த்தப்படும் வரை செல்லுபடியாகுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில்,  அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் நாளை கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள்  குறிப்பிட்டதொரு இடத்தில் தகவல்களை வழங்க வேண்டியுள்ள நிலையில், சாரதிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.#

அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் பயணிக்கும் நபர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தினை குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவிக்கின்றார்.

இதற்கமைய, அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக 11 வகையான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் எனவும், அதற்குப் பின்னரான காலப்பகுதியில் தகவல்களை மாற்றவோ, திருத்தியமைக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு பதிவு செய்யப்படுகின்ற வாகனங்களை உரியவர்கள் மாத்திரமே பயன்படுத்தவோ அல்லது பயணிக்கவோ முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவிக்கின்றார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz