மெய்ப்பொருள் காண்பது அறிவு

மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

- Advertisement -

நாட்டின் நிலவிவரும் மழையுடனான வானிலை குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

எனினும், மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், ஊவா, மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும்  எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக மழையுடனான வானிலையை தொடர்ந்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து விடுக்க்பட்டிருந்த வெள்ள அபாய நிலைமையானது படிப்படியாக குறைந்துவருவதாக நீர்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

களனி கங்கை, மஹாவலி கங்கை, களுகங்கை, கின்கங்கை, நில்வளா கங்கை மற்றும் மஹா ஓயா ஆகியவற்றினை அண்மித்த பிரதேசங்களுக்கே இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுக்கபட்டிருந்தது.

இதனிடையே, நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக் காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

எனினும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களுக்கு விடுக்கபட்டிருந்த அவதான எச்சரிக்கையில் தளர்வு காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, களுத்துறை, நுவரெலிய, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, மாத்தறை, கேகாலை, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிதல், மரங்கள் முறிந்துவிழுதல், நிலம் தாழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து தெடர்ந்தும் அவதானமாக செயற்பபடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz