மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

- Advertisement -

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு என குறிப்பிடப்படும் பிம்ஸ்டெக் அமைப்பு 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

- Advertisement -

அத்துடன், பிம்ஸ்டெக் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரான இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தற்போதைய தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், இந்த வருட இறுதியில் 5ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை நடத்துவது குறித்து இலங்கை அவதானம் செலுத்தியுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்கான, 7ஆவது பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டம் உட்பட எட்டு முக்கிய பிம்ஸ்டெக் கூட்டங்களை இலங்கை கூட்டியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், உலக சனத்தொகையில் 22 சதவீதத்தை பிம்ஸ்டெக் அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தை மாத்திரமே இவ்வமைப்பு பங்களிப்புச் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிராந்தியத்தின் சவால்களை வெற்றி கொள்வதற்காக, உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை சிறந்த முறையில் பேணவும், ஒன்றிணைந்த முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz