மெய்ப்பொருள் காண்பது அறிவு

MV X-Press Pearl  கப்பல் தீப்பரவல் தொடர்பில் 20 பேரில் வாக்கு மூலம் பதிவு

- Advertisement -

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான MV X-Press Pearl  கப்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினால் இதுவரை 20 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கப்பலின் கெப்டன் மற்றும் பொறியியலாளர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட  20 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், கப்பலின் கருப்பு பெட்டியாக கருதப்படும்  ஒலிப்பதிவு கருவி குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதன் தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி,  கப்பலின் கெப்டன்,  கப்பல் நிறுவனம் மற்றும் முகவர்கள் ஆகியோருக்கு இடைடையில் பரிமாற்றப்பட்ட   தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை,  தீப்பரவலுக்குள்ளான MV X-Press Pearl  கப்பலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கு குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து  ஏற்கனவே இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் ஊடாக குறித்த இழப்பீடு கோரப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்  தர்ஷனி லஹந்தபுர  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த சுமார் 40 கொள்கலன்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்  தர்ஷனி லஹந்தபுர மேலும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz