மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு பாரியளவிலான அனர்த்தமொன்றை நோக்கி பயணிக்கின்றது

- Advertisement -

நாடு பாரியளவிலான அனர்த்தமொன்றை நோக்கி பயணிப்பதாக, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.

இதன்கடி,  இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை சரியான பாதையில் நகர்த்திச்செல்வதற்கு, அனைவரும் அத்தியவசியமான அத்திவாரத்தினை இட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் நாடளாவிய ரீதியிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கை தற்போது பங்களாதேஷ் உடன் கடனடிப்படையிலான நிதிப்பரிமாற்றத்தைச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் உருவான பங்களாதேஷிடமிருந்து 200 முதல் 250 மில்லியன் அமெரிக்க டொலர் வரையான நிதியை இலங்கை அரசாங்கம் பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் பிழையான கொள்கைகள் காரணமாக நாடு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், முன்னாள் நிதியமைச்சர் மங்கல சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz