மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதலாவது தொகுதியைப் பெற்றவர்களுக்கு, ஸ்புட்னிக் லய்ட் அல்லது ஜோன்ஸன் ஜோன்ஸன் தடுப்பூசி

- Advertisement -

எஸ்ட்ரா செனகா தடுப்பூசியை மேலும் பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், அதன் முதலாவது தொகுதியைப் பெற்றவர்களுக்கு, ஸ்புட்னிக் லய்ட் அல்லது ஜோன்ஸன் ஜோன்ஸன் தடுப்பூசியை வழங்குவது குறித்து கவனஞ் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசண்ண குணசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

குறித்த இரண்டு தடுப்பூசிகளும் கொவிட் நோயாளர்களுக்கு ஒரு தடவை மாத்திரமே வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில், அந்த இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றை, முதலாவது, ஸ்புட்னிக் லய்ட் அல்லது ஜோன்ஸன் ஜோன்ஸன்  வழங்குவதில், ஆபத்துகள் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,  , ஸ்புட்னிக் லய்ட் மற்றும் ஜோன்ஸன் ஜோன்ஸன் ஆகிய தடுப்பூசிகளை ஒரு மறை மாத்திரம் பெறுவதின் ஊடாக, அதிக நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதாகவும் வைத்தியர் பிரணசன்ன குணசேன தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், எஸ்ட்ரா செனகாவின் முதலாவது தொகுதியைப் பெற்றவர்களுக்கு, இரண்டாவது தடுப்பூசியாக இவற்றை வழங்குவதில் பிரச்சினை கிடையா என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு 15,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை, இரண்டாவது தடுப்பூசி பயன்பாட்டுக்காக வழங்க,  ரஷ்ய தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்  சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலாம் தொகுதியை செலுத்துவதற்காக மேலும் 50,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz