மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களுக்கு இலங்கை திரும்ப தடை

- Advertisement -

கடந்த 14 நாட்களுக்குள் தெற்கு அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்ற நபர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய அபேவிக்கிரம இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதனை அனைத்து விமான சேவைகளுக்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன்,  இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு இதற்கு முன்னர் விதித்திருந்த தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டன.

எனினும், தற்போதைய கொவிட்19 அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, கடந்த 14 நாட்களினுள் தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்ற நபர்கள் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz