மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மீள ஆரம்பிக்க தீர்மானம்

- Advertisement -

இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மீள ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய நிலைமை குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த தொலைநோக்கு  கல்வி  மேம்பாடு  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதற்கமைய இம் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்க தீர்மானிககப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொது போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் புதிதாக வகுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,இது குறித்து கவனஞ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை சமமான முறையில் மகாமைத்துவம் செய்ய அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz