மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 மாகாணங்கள் மற்றும் 2 மாவட்டங்களில் இன்றும் அடை மழை பெய்யும் சாத்தியம்

- Advertisement -

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லி மீற்றர் மழைவிழ்ச்சி பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்துக் காணப்படும் என்பதுடன் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியத்திலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  6 மாவட்டங்களுக்கு விடுக்கபட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதற்கமைய, கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அஹலவத்த, பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடை, கலவான பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பிரதேச செயலக பிரிவிக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலப்பாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, நிவித்திகலை மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், நிலம் தாழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்பபடுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, பெய்துவரும்  தொடர் மழை காரணமாக  அத்தனகலு ஓயா, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனை  அண்மித்துள்ள தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிங்கங்கை நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதனை அண்மித்துள்ள பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz