மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்   மீது  சைபர் தாக்குதலா..?

- Advertisement -

ஜனாதிபதி  செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்   மீது  சைபர் தாக்குதல் நடாத்தப்படவில்லை என   இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி  செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இதற்கமைய, ஜனாதிபதி  செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆராய்சி ஸ்தாபனம், அளவைத் திணைக்களம், குடும்பநல சுகாதார பணியகம், வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவு ஆகியவற்றின் இணையத்தளங்கள்  இவ்வாறு ஊடுருவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு இதனை அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz