மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு  நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு  செய்வதற்கு  தடை

- Advertisement -

சீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு  நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு  செய்வதற்கு  தடை விதிக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இராணுவ தொடர்பு காரணமாக பாதுகாப்பு கருதி இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நடைமுறையானது எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 59  சீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு  நிறுவனங்கள்  பாதிப்படையும் சந்தர்ப்பம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறித்த நிறுவனங்களில் பெயர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிறுவனங்கள் தமது வர்த்தக பத்திரங்களை கொள்வனவு செய்வது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கர்கள் சீன இராணுவத்திற்கு நிதியுதவி வழங்கவில்லை என்பதனை உறுதி செய்வதனை நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு காரணங்களுக்கான 31 சீன செயலிகளுக்கு தடைவிதித்தமை  சுட்டிக்காட்டத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz