மெய்ப்பொருள் காண்பது அறிவு

நட்டத்தினை ஈடுசெய்வதற்கு கப்பலின் உரிமை நிறுவனம் இணக்கம்

- Advertisement -

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுள்ள நட்டத்தினை ஈடுசெய்வதற்கு குறித்த கப்பலின் உரிமை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வணிகக் கப்பற்றுறை செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் அஜித் செனவிரத்ன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், கப்பலில் தீப்பரவல் தொடர்பான அழிவுகள் குறித்து கணக்கிடப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், காப்புறுதி நிறுவனத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்து நட்டயீட்டை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கப்பல் செயற்பாட்டு பதிவு தொகுதியை கண்டுப்பிடித்து அதனை விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பெறறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்து தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க்கசிவு ஏற்படுகின்றதா என்பது தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டுவருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எண்ணெய்க்கசிவு ஏற்படும் பட்சத்தில் அதணை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கப்பல் நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கப்பலின் பிற்பகுதியானது 22 மீற்றர் அளவிற்கு கடலில் சிக்குண்டுள்ளதாகவும், முற்பகுதி பகுதியளவில் நீருக்குள் மூழ்கிவருவதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

இதேவேளை, கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் பெருமளவில் தீக்கிறைக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz