மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டு  வர்த்தக வாகனங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்து

- Advertisement -

பயணக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு தவறிய நடமாடும் இரண்டு  வர்த்தக வாகனங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

கந்ததானை மற்றும் ராகமை ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

- Advertisement -

இதற்கமைய பயணக்கட்டுப்பாடுடன் நடமாட்டக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளமையினால் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக நடமாடும் சேவைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதியளிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் அத்தியாவசிய பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் விலை காட்சிப்படுத்தப்படாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகார சபை பொது மக்களின் நன்மைக்கருதி கண்காணிப்பு நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz