மெய்ப்பொருள் காண்பது அறிவு

எண்ணெய்கசிவு இடம்பெற்றுள்ளதா..? ஆய்வுகள் ஆரம்பம்

- Advertisement -

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்து தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க்கசிவு ஏற்படுகின்றதா என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டுவருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எண்ணைக்கசிவு ஏற்படும் பட்சத்தில் அதணை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கப்பல் நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

எவ்வாறாயினும், கப்பலின் பிற்பகுதியானது 21 மீற்றர் அளவிற்கு கடலில் சிக்குண்டுள்ளதாகவும், முற்பகுதி பகுதியளவில் நீருக்குள் மூழ்கிவருவதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

மேலும், இதுவரையில் கப்பலில் இருந்து எந்தவித எண்ணைக்கசிவும் ஏற்பட வில்லை என கப்பல் நிறுவனத்தினால் அறிக்கை ஒன்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் பெருமளவில் தீக்கிறைக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை, கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பரவலுக்குள்ளான mv express pearl கப்பலின் நிலை குறித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை பெறப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கப்பலின் தன்மை குறித்து உரிய முறையில் ஆரயப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய நிலையில், எந்தவொரு சுழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் பட்சத்தில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவிகளை பெறும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பரவலுக்குள்ளான  M V X PRESS PERL  கப்பல்  தொடர்பில்  பேராசிரியர்  சந்திமா விஜேகுணவர்தன   தெரிவித்த கருத்து தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரசாயன கொள்கலன்கள்  அடங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக  பேராசிரியர்  சந்திமா விஜேகுணவர்தன   கடந்த 30 ஆம் திகதி தெரிவித்திருந்ததாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்

இந்த நிலையிலேயே  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  இன்று முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் துரதிஸ்டவசமாகவே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அதனை முகாமைத்துவம் செய்து பயணிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்தும் தெரிவிக்கையில்..

பாரியளவிலான கப்பல்களை நிர்வகிக்கும் ஒரு துறைமுக கேந்திர நிலையமாக எமது அதிகாரசபை காணப்படுகின்றது. ஆகையினால் இவ்வாறான சந்தர்பங்கள் பதிவாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் எண்ணை கொள்களன் ஒன்று விபத்துக்குள்ளாகி அதனால் எண்ணை கசிவு ஏற்ப்பட்டு பாதிப்புகள் ஏற்ப்படலாம். அதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பல காரணங்கள் காணப்படும். ஆகவே இவைகள் துரதிஸ்டவசமாக இடம்பெறும் சம்பவங்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பொறுப்பு கூறலில் இருந்து நாங்கள் வில செயற்ப்படும் அரசாங்கம் இல்லை. என்றார்.

இதேவேளை, தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாய் நிறுவனமானது இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் மிக நீண்டகாலமாக இணைந்து செயற்படும் நிறுவனமாக காணப்படுவதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜென்ரல் தயாரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz