மெய்ப்பொருள் காண்பது அறிவு

சேதனப்பசளையை உள்நாட்டிலேயே தயாரிக்க ஜனாதிபதி பணிப்பரை

- Advertisement -

பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உர உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் எவை என்பது பற்றி ஆராய்ந்து, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் தயாரிக்க முடியுமான இயந்திரங்களை அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் பங்களிப்புடனும் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு உர உற்பத்திக்கான தொழிநுட்ப அறிவை பெற்றுக்கொடுப்பதோடு, சேதன பசளைக்கான மூலப்பொருட்களை கிராமங்களிலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது  சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சமுர்த்தி பயனாளர்களையும் இணைத்து சேதன பசளையை உற்பத்தி செய்ய முடியும் என்பதுடன், புதிய கிராமிய பொருளாதாரம் ஒன்றையும் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு விவசாயிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை போதுமானளவு தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்வது கட்டாயமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, சேதனப்பசளைக்கு தேவையான முழுமையான சேதனப் பசளையை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், பற்றாக்குறைகள் ஏற்படுமாயின் விநியோகிக்கப்பட வேண்டிய சேதனப் பசளையின் அளவை அரசாங்கத்தின் மூலம் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைப்பதாகவும், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், விவசாயிகளுக்கு சேதனப் பசளையை விநியோகிக்கும்போது, மண் வளம் தொடர்பில் பரிசோதனை செய்து, தேவையான அளவை மட்டும் பரிந்துரைப்பதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றையும் முன்னெடுக்க இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டது.

இதற்காக மண் வளத்தை பரிசோதிப்பதற்குத் தேவையான உபகரணங்களையும் நாட்டில் உள்ள அனைத்து கமநல சேவைகள் மத்திய நிலையங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மேலும் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz