மெய்ப்பொருள் காண்பது அறிவு

விதுசனின் மரணம் தொடர்பில் தாயார் தெரிவித்துள்ள விடயம்

- Advertisement -

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இருதயபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞர், குற்றப் புலனாய்வு பிரிவினர் என கூறப்படும் தரப்பினரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

நேற்று இரவு 10.30 அளவில் குறித்த இளைஞர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நோயினால் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த இளைஞனின் தாயார் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த இளைஞர் அவரை அழைத்துச் சென்ற தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நோய் எதுவும் கிடையாது எனவும் இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞர் போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒருவர் எனவும், நேற்று இரவு அவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும், மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த இளைஞர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படவில்லை எனவும், போதைப் பொருள் விற்பனை செய்தமை தொடர்பில் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த இளைஞர் மீது ஏற்கனவே வழக்குகள் காணப்படுவதாகவும், மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், அவருடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாகவும், இருவரும் நேற்று இரவு சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், இன்று அதிகாலை 2.30 அளவில் எந்த சலனமும் காணப்படாத நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தெரிவிக்க முடியும் எனவும், மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர், சம்பவ இடத்துக்கு வருகை தந்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி திருமதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளை இளைஞன் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவொன்று இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு தடயவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz