மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவை கையாளும் ஆளுகை அரசாங்கத்திற்கு இல்லை

- Advertisement -

அரசாங்கத்திற்கு கொரோனா தொற்றை கையாளும் ஆளுமை மற்றும் அனுபவம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார  இதனை தெரிவித்தார்.

- Advertisement -

 

இதேவேளை, நாடளாவிய  ரீதியில் வைத்தியசாலை   ஊழியர்கள் இன்று முன்னெடுத்துள்ள அடையாள பணிப்பகிஸ்கரிப்பினை முன்னிட்டு   முல்லைத்தீவு வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்களும் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணிமுதல் அரை மணித்தியாலம் வைத்தியசாலை முன்பாக அடையாள பணி ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு -உண்ணாப்புலவு வைத்தியசாலை, மல்லாவி வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளிலும் குறித்த கவனயீர்ப்பு  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், சுகாதார தொழிற்சங்கத்தின் ஒன்றியம் மற்றும் மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் இணைந்து 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று நண்பகல் 12 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கொரோனா தொற்று நோய் தொடர்பான முடிவெடுக்கும் செயற்பாடுகளில் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவையும் இணைத்தல், வைத்திய சாலை பணிக்குழுவினருக்கு தடையின்றி தேவைப்படும்   சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கொரோனா தடுப்பூசி இது வரை வழங்கப்படாத பணிக் குழுவினருக்கு அதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கையை முன் வைத்து  ஒரு மணி நேர அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

குறித்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதற்குரிய மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று மதிய உணவு வேளையில் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு  போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அவர்களுக்கான சரியான முறையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் அரசினால் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், யாழ் மாவட்ட தாதியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  தாதியர்களும்  இன்று காலையிலிருந்து அடையாள  பணிபுறக்கணிப்பில்  ஈடுபட்டதுடன், யாழ்போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை,கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பகுதியில்  மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்துள்ளார்

பொரஸ்ட்கிரீக், மவுண்ட்வர்னன் ஆகிய தோட்டப்பகுதிகளில் பெரும்பாலும் ஒரே குடும்த்தைச் சேர்ந்தவர்கள் தொற்றுடன்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  பிரதேச பொது சுகாதார பரிசோதகர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz