மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்

- Advertisement -

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய சில பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், அதனால் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்ப்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை ஊடான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய கடற்பிராந்தியங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியத்திலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவிக்க்ப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவை அண்மித்துள்ள பகுதிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடை, கலவான மற்றும் அயகம ஆகிய  பிரதேச செயலக பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவிற்கும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவிற்கும், நுவரெலிய மாவட்டத்தின் வலப்பன பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலப்பாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், நிலம் தாழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்ப்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலைக்காரணமாக சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களு கங்கை, களனி கங்கை, மற்றும் அத்தனகலு  ஓயா ஆகியவற்றை அண்மித்துள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz