மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாமல் ராஜபக்‌ஷவின் யாழ் விஜயம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு அங்கஜன் பதில்!

- Advertisement -

நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் எந்த மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட முடியுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் யாழ் மாவட்ட விஜயம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

அத்துடன், அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கின்றபோதும், கொரோனா ஒழிப்பு தேசிய செயலணியில் பொறுப்புமிக்கதொரு இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், மக்களை பார்வையிடுபவர்கள் தொடர்பில் குறை கூறுவது நியாயமற்றது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz