மெய்ப்பொருள் காண்பது அறிவு

முழங்காவில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கிய அங்கஜன் இராமநாதன்

- Advertisement -
தேங்கியுள்ள மரக்கறி மற்றும் பழ வகைகளை உள்ளுர் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணணப்பு குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் விவசாயிகளுக்கு உறுதி வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்த அங்கஜன் இராமநாதன், அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சிசினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது தமது உற்பத்திகளை தம்புள்ளை சந்தை உள்ளிட்ட இடங்களிற்கு ஏற்றுமதி செய்து வந்ததாகவும், தற்போது உள்ள்ள நிலையில் அவற்றை ஏற்றமதி செய்ய முடியாதுள்ளதாகவும் விவசாயிகளால் பிரச்சினை முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, தம்புள்ளைக்கு ஏற்றி செல்லப்பட்ட விவசாய உற்பத்திகளுக்கான பணம் வழங்கப்படவில்லை எனவு்ம, அவை விற்பனை செய்யப்படவில்லை எனவும், கழிவாக வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
உண்மை நிலை என்னவென்று அறியாது தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமது மரக்கறி மற்றும் பழங்களின் உற்பத்தி தேங்கி காணப்படுவதால் விற்பனை செய்ய முடியாது தாம் உள்ளதாகவும் விவசாகளால் பிரச்சினை முன்வைக்கப்பட்டது.
குறித்த உற்பத்திகளை உள்ளுர் வர்த்தக நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதி அளித்துள்ளார்.
குறித்த விவசாய உற்பத்திகளை அமைப்பு ஒன்றின் ஊடாக கொள்வனவு செய்து, அதனை மொத்தமாக ஓர் இடத்திலிருந்து வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு தருவதாக விவசாயிகளிடம் அவர் குறிப்பிட்டிருந்தார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz