மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைவருக்கும் 5000 வழங்கப்படும்

- Advertisement -

சமூர்த்தி பயனாளர்கள் மாத்திரமின்றி குறைந்த இலாபம் பெறும் அனைவருக்கும் கொரோனா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

- Advertisement -

அவர் மேலும் தெரிவிக்கையில்..

‘பிரதேச செயலாளர்களின் சான்றிதழ்களுக்கு அமைவாக நிவாரண கொடுப்பனவினை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். அனைத்து நிவாரண கொடுப்பனவு பயனாளர்களுக்கும் ஓரிரண்டு நாட்களில் கொடுப்பனவினை வழங்கமுடியாது. கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் அனைவருக்கும் வழங்குவோம். ஒரு குடும்பத்திற்கு ஒரு கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படும். இதற்கு 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவில்லை. குறைந்த வருமானம் பெறுபவர்கள் தொடர்பிலும் அவதானம் செலத்தப்பட்டுள்ளது. அதாவது பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட்டவர்களை தவிர குறைந்த இலாபம் பெறுபவர்கள் என சான்றிதழ்படுத்தப்பட்ட ஏனைய தரப்பினருக்கும் இந்த கொரோனா நிவாரண கொடுப்பனவினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.’ என்றார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz