மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு மேலும் 15 இலட்சம் தடுப்பூசிகள்

- Advertisement -

எதிர்வரும் சில வாரங்களில் நாட்டுக்கு 15 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இடம்பெறும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

- Advertisement -

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

‘கொரோனா தடுப்பூசியினை ஒரு தடைவ செலுத்திக்கொள்வதா அல்லது இரண்டு தடவைகள் செலுத்திக்கொள்வதா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சே தீர்மானிக்கும். சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கு அமையவே கொரோனாவை ஒழிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் அதன் பின்புலங்களையே செய்து கொடுக்கின்றோம். தடுப்பூசி செலுத்திக்கொள்கின்ற போது நோ ஒப்ஜெக்சன் விண்ணப்பத்தில் கையொப்பமிடவேண்டும், தடுப்பூசியின் வகை தொடர்பில் பொது மக்களுக்கு கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தப்படும் இடத்தில் மும்மொழிகளிலும் உரையாட கூடிய உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். அவர்களிடம் மக்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும். முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொள்வதா அல்லது இரண்டாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் மக்களே தீர்மானிக்க வேண்டும் அதற்கான உரிமை பொது மக்களுக்கு காணப்படுகின்றது. நாங்கள் ஒன்றை தெளிவாக கூறவேண்டும் நாட்டில் 19 லட்சம் பேருக்கு முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது தடுப்பூசி வழங்குவதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். ‘ என்றார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz