மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஒற்றை தடுப்பூசியாக பயன்படுத்த முடியும்

- Advertisement -

கொரோனா தடுப்பூசி குறித்த புதிய தரவுகளுக்கு அமைய, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஒற்றை தடுப்பூசியாகக் கூட பயன்படுத்த முடியும் என ரஷ்யா இலங்கைக்கு அறிவித்துள்ளதாக அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஸ்புட்னிக் வி முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் நோயெதிர்ப்பு சக்தி 70 முதல் 80 வீதம் வரை அதிகரிப்பதாக, புதிய ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், ரஷ்யாவின் கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனம் மற்றும் இலங்கையின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையில் கடந்த வாரம் இணைய தொழிநுட்பத்தின் ஊடாக இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 28 நாள் காலப்பகுதிக்குள் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க வேண்டும் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், முதலாவது தடுப்பூசி போதுமான நோயெதிர்ப்பு சக்தியை வழங்குவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இரண்டு தடவைகள் வழங்குவதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மருத்துவ தரவு ரீதியான ஆய்வு முடிவுகள் தேவை எனவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்புட்னிக் வி இரண்டாவது தடுப்பூசியை 28 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை தாமதப்படுத்த முடியும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz