மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்ற தொகுதிகள் அனைத்திற்கும் பூட்டு

- Advertisement -

நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து அலுவலகங்களும், எதிர்வரும் ஏழாம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய தேவை கிடையாது என அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, நாடாளுமன்றத் தொகுதியில், பாதுகாப்புப் பிரிவினர் மாத்திரமே தற்போது கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, சபாநாயகர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் அலுவலகங்களில் அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளங் காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள், கடந்த நாட்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, ஏனைய அலுவலகங்களும் எதிர்வரும் ஏழாம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz