மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொரட்டுவை நகர மேயரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

- Advertisement -

தன்னை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மொரட்டுவை நகர மேயரினால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிணை விண்ணப்பம், மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மொரட்டுவையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகளின் போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28 ஆம் திகதி உத்தரவிட்டது.

இதனையடுத்து, தன்னை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி, மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோவினால் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz