மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மின்தடை அமுல் !

- Advertisement -

வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் காணப்படும்  மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய,  யாழ் மாவட்டத்தின்  ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை, மாதகல் மற்றும் மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் (02)  யாழ் மாவட்டத்தின்  இளவாலை, மாரீசன்கூடல், மெய்கண்டான், பெரியவிளான், சேந்தன்குளம் ஆகிய பகுதிகளில் முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில், வவுனியா மாவட்டத்தின் அக்போபுர, கொக்கெலிய, மகாமயிலங்குளம், நொச்சிமோட்டை, பரன்னாட்டன்கல், ஓமந்தை, புதியசின்னக்குளம், சமணங்குளம், சாந்தசோலை, தரணிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு விநியோகத்தடை  அமுல்படுத்தப்படவுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz