மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலையினால் நாட்டில் பாரிய பாதிப்பு – உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு.

- Advertisement -

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 10 மாவட்டங்களில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 212 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அத்துடன், இரண்டு பேர் காணாமல் போயுள்ள நிலையில், தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 817 வீடுகள் பகுதியளவிலும், 14 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், 72 தற்காலிக முகாம்களில் மூவாயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த15 ஆயிரத்து 658 பேர் தங்வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக பாதிப்படைந்த 794 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 397 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 39 ஆயிரத்து 742 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 383 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 33 குடும்பங்களை சேர்ந்த 46 ஆயிரத்து 32 பேர் பாதிக்க்பட்டுள்ளனர்.

மேலும், புத்தளம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 591 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 16 பேர் பாதிக்க்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கேகாலை மாவட்டத்தில் ஐந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேருமாக 14 பேர் அனர்த்தங்களினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக சில பிரேசங்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

நீர்பாசத் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவளை, பியகம,கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமையானது மேலும் அதிகரிக்க கூடும்எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே  மஹாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக  நாவலப்பிட்டி பிரதேசத்திற்குவெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களனிகங்கை, களுகங்கை, கின்கங்கை, நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம்அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாகசெயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, மஹா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அலவ்வ, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கந்தான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக் காரணமாக  10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, மாத்தறை, கேகாலை, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, புலத்சிங்கள, அகலவத்த மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின்  கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவண்வெல்ல, தெரனியகலை, புலத்கோஹோபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரநாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவிற்கும்,  மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடை, கலவான,அயகம மற்றும் கிரியுள்ள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், காலி மாவட்டத்தின்நெலுவ பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரல பிரதேச செயலக பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட மற்றும் ஹொரண ஆகிய பிரதேச செயலகபிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் மிரிஹான, கம்பஹா மற்றும் அத்தனகல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் செம்மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க கோரல, பல்லேபொல மற்றும் யடவத்த ஆகிய  பிரதேச செயலக பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொடபொல மற்றும் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும்  நுவரெலிய மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகபிரிவிற்கும், இரத்தின புரி மாவட்டத்தின் கிரியுள்ள மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பன, உடுநுவர மற்றும் யடிநுவர ஆகிய  பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலக பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவிற்கும் இவ்வாறு மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிதல், மரங்கள் முறிந்துவிழுதல், நிலம் தாழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்பபடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz