மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – முழு விபரம்..!

- Advertisement -

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதன் எண்ணிக்கை 828 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 544 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 255 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 224 பேரும், கேகாலை மாவட்டத்தில் 109 பேரும், காலி மாவட்டத்தில் 117 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 140 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 124 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 114 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 110 பேரும், மாத்தலை மாவட்டத்தில் 36 பேரும், பதுளை மாவட்டத்தில் 64 பேருரம், இரத்தினபுரி மாவட்டத்தில் 86 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 69 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 39 பேரும் பாதிக்க்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய நாளில் 3 ஆயிரத்து 103 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதில் உள்நாட்டில் இருந்து 3 ஆயிரத்து 94 பேரும், வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய 09 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில்கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 2 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனாதொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து95 ஆயிரத்து 678 ஆக காணப்படுகிறது.

மேலும், கொரோனாதொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 851 பேர் குணமடைந்தநிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில்கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 66 ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 36 ஆயிரத்து225 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனாதொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றுஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய உயிரிழப்புகள் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி முதல் இந்த மாதம் 4 ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கொரோனாவைரஸ் தொற்றினால் குறித்த காலப்பகுதியில் 17 பெண்கள் மற்றும் 23 ஆண்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு, குருநாகலை,காலி,  கண்டி, ஹாலிஎல, பலாங்கொடை,  மஸ்கெலியா, நுவரெலியா, பொகவந்தலாவை, களுத்துறை, ஏறாவூர், மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் ஏனையசில பிரதேசங்களில் இருந்தும்  இவ்வாறு உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 பேர் வீடுகளிலே உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனாதொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக உயர்வடைந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz