மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

- Advertisement -

காலி மாவட்ட   பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதானி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் முறைகேடாக செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

காலி மாவட்டமக்களுக்கு வழங்கப்படவிருந்த எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது தொகுதி, வேறுமாகாணங்களைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள்முன்வைக்கப்பட்டிருந்தன.

பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

வைத்தியர்களின் குடும்பத்தினர், அரச சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும்வர்த்தகர்களுக்கு, இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருந்தது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சு இது தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, குறித்த இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz