மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்.

- Advertisement -

நாடளாவிவிய ரீதியில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வங்கிகளுக்கு செல்வதற்கு முப்படையினர் ஊடாக போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதன்படி, ஓய்வூதியப் பணத்தினைப் பெறுவோர், உரிய வங்கிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, மீண்டும் தமது வீடுகளுக்கே அழைத்துவரப்படுவார்கள் என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பயணாளிகள் தேசிய அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை மற்றும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் மூலம் இலவசமாக பயண நடவடிக்கையினை முன்னெடுக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயகங்களின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கும் வகையில், நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் இரண்டு தினங்களுக்கு திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கி உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் திறந்திருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தபால் நிலையங்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு திறக்கப்படவுள்ளன.

இதன்படி, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களும் இன்று, நாளை மற்றும் நாளை மறு தினம் ஆகிய மூன்று நாட்களுக்கு திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதிய கொடுப்பனவு அட்டையை பயண அனுமதிப்பத்திரமாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz