மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

- Advertisement -

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எத்தியோப்பியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள்  பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான Tigray மாநிலத்தில் ஏற்பட்ட  மோதல்  தொடர்பில் ஜோ பைடன் முன்வைத்த கொள்கைகளுக்கு எதிராகவே   இந்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஏழு மாதங்களில், இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தப் பேரணியில், அமெரிக்காவை விமர்சிக்கும் வகையிலான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த பேரணியில் பங்கேற்றவர்கள் சிலர் ரஷ்ய ஜனாதிபதி மற்றும் சீன தலைவர் ஆகியோரை பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tigray மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட  மோதலின் போது பெரும்பாளன பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2 மில்லியனுக்கும் அதிகளவானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

Tigray மாநிலத்தில் கடந்த நவம்பர் முன்னாள் ஆளும் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு  ஆதரவான படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு  பிரதமர் அபி அகமது உத்தரவிட்ட நிலையில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், எத்தியோப்பிய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக சில வாரங்களுக்கு முன்னதாக அறிவித்திருந்த போதும், Tigray பகுதியில் உள்ள எத்தியோப்பிய படைகளை மீளபெறவேண்டுமென அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொழுத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது  இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை தீவிரமாக பாதிக்குமென எத்தியோப்பிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz