மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மேலும் 2859 பேருக்கு கொரோனா

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 859 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 849 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 10 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 83 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 76 ஆயிரத்து 889 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 434 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 49 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 32 ஆயிரத்து 186 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 441 ஆக உயர்வடைந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz